Thursday, 23 June 2016

ராமன் – மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை !


ராமன்மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை !
by வினவு, June 23, 2016
ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசை குறிப்பாக மோடி, ஸ்மிருதி ராணி கும்பலை விமரிசித்திருக்கிறார்.

magesh-guru
பேராசிரியர் மகேஷ் குரு
மைசூர் பல்கலையில் பத்திரிகையியல் துறை பேராசிரியாக பணிபுரிபவர் மகேஷ் குரு. அயோத்தி ராமனை ஜனவரி 2015-ல் இழிவுபடுத்தி பேசியதாக இவர் மீது வழக்கு தொடுத்ததுகர்நாடு சர்வோதயா சேனாஎனும் இந்துத்துவ வெறி கொண்ட ஒரு பெயர்ப்பலகை அமைப்பு. அப்படி அவர் என்ன பேசினார்?
மனைவி சீதாவிடம் கடவுள் ராமன் அநீதியாக நடந்து கொண்டான் என்ற அனைவரும் அறிந்த உண்மையை அவர் பேசியதுதான் அந்த இழிவுபடுத்தலாம். அயோக்கியர்கள். இந்த வழக்கில்தான் பிணை கேட்டு வந்தவரை சிறையில் அடைத்திருக்கிறது மைசூர் நீதிமன்றம். ஏன்?
அயோக்கிய ராமனின் வண்டவாளத்தை எடுத்து வைத்த பேராசிரியர் இந்த ஆண்டு ஜனவரியில் ரோகித் வெமுலாவிற்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய சில விமரிசனங்களுக்காகஅகிலா கர்நாடகா டாக்டர் அம்பேத்க்ர் பிரச்சார சமிதிஎனும் இந்துத்துவ வெறி கொண்ட பெயர்ப்பலகை அமைப்பு வழக்கு தொடுத்திருக்கிறது. என்ன விமரிசனங்களை பேசினார்? ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசை குறிப்பாக மோடி, ஸ்மிருதி ராணி கும்பலை விமரிசித்திருக்கிறார்.
மகிஷாசுரனது தியாக தினத்தை கொண்டாடிய பேராசிரியர் மீது இந்துமதவெறியர்களுக்கு எவ்வளவு வெறி இருக்கும் என்பது சொல்லி விளக்க வேண்டியதில்லை. ரோகித் வெமுலா பிரச்சினையில் பாராளுமன்றத்தில் உறுமிய ஸ்மிருதி ராணி, அசுரனைக் கொன்ற துர்க்கையை நிந்திக்கிறார்கள் என்று குற்றப்பட்ட்டியல் படித்தவராயிற்றே!
ரோகித் வெமுலா பற்றிய கூட்டத்தில் மோடியையோ, ஸ்ம்ருதி ராணியையோ பாராட்டியா பேச முடியும்? காந்தி கூட்டத்தில் கோட்சேவை விமரிசிக்க கூடாதாம் இவர்களுக்கு! இப்படி இன்னொரு வழக்கில் இவர் இருப்பதால் பிணை கிடையாது என்று சிறைக்கு அனுப்பியிருக்கிறதுகுமாரசாமிகள்வாழும் மைசூர் நீதிமன்றம்.
சில பத்தாண்டுகளாக பேராசிரியர் பணியில் இருக்கும் குரு, மத்திய மற்றும் மாநில பப்ளிக் கமிஷன்  சர்வீஸ் கமிஷனிலும் பணியாற்றியிருக்கிறார். தற்போது மைசூர் நீதிமன்றம் இவரை இடை நீக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் இந்துமதவெறியர்களை எதிர்த்தால்,பேசினால், எழுதினால் இதுதான் தண்டனை என்று அறிவுத்துறையினரை அச்சுறுத்துகிறார்கள்.
எனில் நரவேட்டை மோடியையும், பார்ப்பன வெறி ஸ்மிருதி ராணியையும், அயோக்கியன் ராமனையும் ஆயிரம் முறை விமரிசிப்போம்.

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?
அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா. எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபா கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“பருவ மழை பொத்து வறட்சி ஏற்பட்டாலும் நமது மக்கள் எவரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்” எனக் கடந்த மாதம் மன்மோகன் சிங் முழங்கிக் கொண்டிருந்தபோதே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பட்டினிச் சாவுச் செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில மட்டும் ஜூலை 2008 முதல் ஜனவரி 2009 வரை, சத்தான உணவின்றி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 676. அங்கு கர்ப்பிணிகளுக்குப் போதிய ஊட்டச்சத்தான உணவு இல்லாததால், ஒவ்வொரு நாலு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இறந்தே பிறக்கிறது. தப்பிப் பிழைக்கும் குழந்தைகளில் 14 சதவீதம், தங்களது ஆறு வயதிற்குள் மடிந்து போகின்றன. ஊட்டச் சத்தின்மையால் வாடும் குழந்தைகளின் சதவீதம் 45-இல் இருந்து 60-ஆக இப்போது உயர்ந்துள்ளது.
அம்மாநிலத்தில் கிராமங்களைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கொழிந்து, பசியின் கொடுமையால் அண்மையில் இறந்து போன குழந்தைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அழைக்கும் வழக்கம் உருவாகி உள்ளது. அவற்றை “ஆறு பிள்ளைகளின் கிராமம்” என்றும் “பத்து பிள்ளைகளின் கிராமம்” என்றும் அழைப்பதைக் கேட்கவே கொடுமையாக உள்ளது. அந்தக் கிராமங்களில் உள்ள குழந்தைகள், உப்பிய வயிறோடும் வதங்கிய கை-கால்களோடும் பிதுங்கிய விழிகளோடும்  அவை மனிதக் குழந்தைகள்தானா என்று சந்தேகம் எழும் அளவு பட்டினியால் ஒடுங்கிப் போக் காணப்படுகின்றன.
இவ்வாறு குழந்தைகள் பட்டினியால் சாவது குறித்து அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான கணேஷ் சிங், “எதற்கெடுத்தாலும் அரசாங்கம்தான் வர வேண்டுமென இந்த மக்கள் ஏன் எதிர்பார்க்கிறார்கள்?”, “தன் கையே தனக்குதவி என இருப்பவர்களுக்குத்தான் அரசு உதவும்” என திமிரோடு கூறுகிறான்.
கணேஷ் சிங்கின் தொகுதியைச் சேர்ந்த மக்கள், எதற்கெடுத்தாலும் அரசை எதிர்பார்த்திருப்பவர்களும் அல்லர். கிராமங்கள் மீது எவ்வித அக்கறையுமில்லாத அரசு, விவசாயம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திவிட்ட பிறகு, சொத்துக்கே வழியில்லாத மக்கள் தங்களது நிலங்களை முதலில் அடமானம் வைத்தார்கள். வேறு வேலையும் கிடைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் மொத்த கிராமமுமே கடனில் மூழ்கி, பசிப் பிணியால் குழந்தைகள் செத்து மடியும் சூழல். அப்போதுதான் வேறுவழியின்றி அரசின் உதவியை அம்மக்கள் நாடினர். மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படுவோரோ அம்மக்களைப் பிச்சைக்காரர்களைப் போலச் சித்தரிக்கின்றனர்.
“உணவுக்கான உரிமை” என்ற பிரச்சார குழுவைச் சேர்ந்த சச்சின் ஜெயின், “இனம், மொழி, நிற பேதமின்றி அனைத்து தேசங்களிலும், குழந்தைகளுக்கு உணவளிப்பதைத்தான் தமது முதல் கடமையாகப் பெற்றோர்கள் கருதுகின்றனர். இங்கே குழந்தைகள் பஞ்சத்தில் மடிகிறார்கள் எனில், அதுதான் பஞ்சத்தின் உச்சம். இங்கு ஒட்டுமொத்த சமூகமே உணவின்றி வாடுகிறது என்று பொருள்” என்கிறார்.
இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா
மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பட்டினிச் சாவுகள் நடந்தவண்ணம் உள்ளன. நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டோம், நமது கிடங்குகளில் உள்ள தானிய மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் நிலவுக்கே கூட போய் வரலாம் எனப் பொருளாதார மேதைகள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே, திசைகள் எங்கும் பட்டினிக் கொடுமை நீக்கமற நிறைந்திருக்கிறது. நெல்லின் பிறப்பிடமான ஒரிசாதான் இந்தியாவிலேயே பட்டினிக் கொடுமையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச இறப்பு விகிதம் உள்ள மாவட்டம் ஒரிசாவின் காலகந்தி ஆகும் (ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 140 பேர் செத்துப் போகிறார்கள்). பட்டினிக் கொடுமையின் இறுதி நிகழ்வான வயிற்றுப் போக்கால் இங்கு மக்கள் மடிந்து போவது வழமையாக உள்ளது. “இந்த கிராமத்தில் ஒருவன் நோயில் படுத்தால் அவன் செத்து போக வேண்டியதுதான்” என்கிறார், தனது மனைவியையும், குழந்தையையும் அடுத்தடுத்து பறிகொடுத்த மதன் நாயக் என்பவர். இவ்வாறு பட்டினியால் மக்கள் சாகும் காலகந்தி-போலன்கிர்-கோராபுட் பகுதியில் இருந்துதான் ஏழு கோடீஸ்வர வேட்பாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர் என்பது முரண்நகை.
காலகந்திக்கு அருகிலே உள்ள காசிப்பூர் பகுதியில் விவசாயம் பொத்துப் போனதால், உணவுக்கு வழியின்றி மக்கள் அல்லாடுகின்றனர். ஒரு காலத்தில் தமக்கென சொந்தமாக நிலம் வைத்திருந்த பழங்குடியினரும், சிறு விவசாயிகளும் கொஞ்சம் கொஞ்சமாக பெரு விவசாயிகளிடம் அற்ப விலைக்குத் தமது நிலங்களை விற்று விட்டு விவசாயக் கூலிகளாக மாறிப்போயுள்ளனர். விவசாயம் பொத்துப் போகும் போது உணவுக்கு வழியின்றி மாங்கொட்டைகளை அரைத்து உண்கின்றனர். பூஞ்சை படர்ந்து நஞ்சாகிப் போன மாங்கொட்டைகளை உட்கொண்டதால் 2001-இல் இந்தப் பகுதியில் 54 பேர் வாந்தி-பேதிக்கு பலியானார்கள்.
கடந்த சில வருடங்களில், இதுவரை 540 பேர் வரை பட்டினியால் மடிந்து போனது குறித்து ஒரிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கிடம் கேட்ட பொழுது “இங்கு பட்டினிச்சாவே இல்லை” என்று ஒரே வரியில் கூறி மழுப்பிவிட்டார். ஆனால் ஒரிசாவின் பழங்குடியினரும், விவசாயிகளும் வயிற்றுப் பிழைப்புக்காக சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களுக்குப் படையெடுக்கும் காட்சியோ, அவர் கூறுவது முற்றிலும் பொ என்பதை நிரூபிக்கிறது. அவர்கள் அந்நகரங்களில் கூலி வேலை பார்த்து சம்பாதிப்பதில் 70 சதவீதத்தை அந்நகரங்களில் செலவழித்தது போக, மிஞ்சும் அற்பத் தொகைதான் ஒரிசாவிலுள்ள அவர்களது குடும்பத்திற்கு உணவுக்குச் செலவிடப்படுகிறது.
நிலச் சீர்திருத்தத்தை முறையாகச் செய்த ஒரே மாநிலம் என சி.பி.எம். கட்சியினர் பெருமையுடன் பீற்றிக் கொள்ளும் மேற்கு வங்கத்தின், மேற்கு மித்னாபூரில் உள்ள அம்லாசோல் கிராமத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து வருகின்றன. மேற்கு வங்க போலி கம்யூனிஸ்டு அரசு பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கதையளந்தாலும், இன்றும் அம்லாசோல் அதே நிலைமையில்தான் உள்ளது. பட்டினிச் சாவுகளை வெளிக் கொணர்ந்த அம்லாசோல்-ஐச் சேர்ந்த சி.பி.எம். கட்சி உறுப்பினரான கைலாஷ் முண்டா என்பவர், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார் என்ற ஒரேயொரு மாற்றம் தவிர்த்து, எதுவும் மாறிவிடவில்லை. அதேபோல, லால்கரை ஒட்டிய பகுதிகளில் உணவுப் பற்றாக்குறையும், குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாமல் தவிப்பதும் நிரந்தரமாக நிலவுகிறது.
இம்மூன்று மாநிலங்களில் மட்டுமல்லாது இன்னும் பிற மாநிலங்களிலும் விவசாயக் கூலிகளும் அவர்களது குழந்தைகளும் பட்டினியால் மரணமடைந்து வருகின்றனர். விஷம் போல ஏறும் விலைவாசி அவர்களது மரணத்தைத் துரிதப்படுத்திவருகிறது. இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றிவருவதாக ஆளும் வர்க்கம் கூறி வருகிறது. ஆனால் உண்மையில் “மக்களின் வாழ்கைத் தரத்திலும், சுகாதாரத்திலும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்திலும் இந்தியா பஞ்சத்தில் அடிபட்ட ஆப்பிரிக்காவின் சஹாராப் பாலைவனப் பிரதேசங்களைப் போன்று நலிவுற்று உள்ளது” என நோபல் பரிசு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் அமர்த்யா சென் கூறியுள்ளார். இதுதான் வல்லரசுக் கனவுகளோடு நோஞ்சான் தலைமுறையை அடைகாக்கும் இந்தியாவின் நிலைமை. வயிற்றை நிரப்ப உணவின்றிப் பச்சிளங்குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும்போது நாட்டை வல்லரசாக்குவதையும், சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதையும் பற்றி மேதாவிகள் அளந்து கொண்டிருக்கின்றனர். கும்பி கூழுக்கு அழுததாம்! கொண்டை பூவுக்கு அழுகிறதாம்!
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2009
 

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு யோகா – பன்னாட்டு நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடு !

RAPE-ஐ தடுக்க முடியவில்லையா? அனுபவி!

அறிஞர் பத்ரி சேஷாத்ரியின் திகில் அறிவிப்பு!

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ராணுவத் தளவாடங்களை நம் நாடு வாங்கிக்கொண்டுதான் இருக்கும். உலகச் சந்தைகளில் மிகப் பெரிய அளவில் ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடு இந்தியா. அரசின் தளவாடங்கள் தயாரிக்கும் சில தொழிற்சாலைகள் தவிர்த்து, தேவைகள் அனைத்தையும் நாம் வெளிநாடுகளில்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள், டாங்கிகள், பீரங்கிகள் முதல் பைனாக்குலர் வரை. இவற்றை அந்நிய நிறுவனங்களைக் கொண்டு இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வாங்கிக்கொண்டால் செலவு குறையும், ஊழல் குறையும், உள்நாட்டுப் பொருளாதாரம் வளரும், உள்ளூர்த் தொழில்கள் வளரும் என்பது புரிந்துகொள்ள எளிதானது.
– மருந்து உற்பத்தி, விமான போக்குவரத்து, இராணுவ தளவாடத் துறைகளில், 100% அந்நிய முதலீட்டை திறந்து விடும் மோடி அரசைப் பாராட்டி, கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி அவர்கள் வெளியிட்டிருக்கும் பிரகடனத்திலிருந்து…

இந்தப் பிரகடனத்தின் தமிழாக்கம் கீழே:
badhri
இனியும் “ரேப்பை” நம்பியார் காலத்து துகிலுரியும் செக்ஸ் திரில்லராக புலம்பாமல், டிரில்லியன் கணக்கில் பணத்தை கொட்டும் கார்ப்பரேட் தொழிலாக பாருங்கள்!
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடந்து கொண்டுதான் இருக்கும். உலக அளவில் மிகப் பெரிய அளவில் பாலியல் வன்முறை நடக்கும் நாடு இந்தியா. வண்ணத்திரை, சினிக்கூத்து, டைம் பாஸ், சாரு போன்ற சில்லறைகளைத் தவிர்த்து போர்னோவுக்கு நாம் வெளிநாடுகளையே சார்ந்து இருக்கிறோம். போர்னோ தளங்கள், நடிகர்கள், பொருட்கள், நேரலை வரை. இவற்றை அந்நிய நிறுவனங்களைக் கொண்டு இந்தியாவிலேயே சர்வர் வைத்து நடத்தினால் செலவு குறையும், ஓசியில் பார்ப்பது குறையும், உள்நாட்டு போர்னோ ரசனை வளரும், காண்டம் பயன்பாடு அதிகரிக்கும், உள்ளூர வேலை வாய்ப்புகள் பெருகும் என்பது புரிந்து கொள்ள எளிதானது. இனியும் “ரேப்பை” நம்பியார் காலத்து துகிலுரியும் செக்ஸ் திரில்லராக புலம்பாமல், டிரில்லியன் கணக்கில் பணத்தை கொட்டும் கார்ப்பரேட் தொழிலாக பாருங்கள்!
————————————————————————

யோகா உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்ல அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் ‘விடுதலை’ செய்கிறது!

யோகா உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்ல அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் ‘விடுதலை’ செய்கிறது!
யோகா உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்ல அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் ‘விடுதலை’ செய்கிறது!
கார்ட்டூன் நன்றி: Ila Joshi
———————————————————————–

சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !

பொய் புரட்டுகளால் கட்டமைக்கப்பட்ட இந்து பாரம்பரியம் குறித்த பார்ப்பன பாசிஸ்டுகளின் பெருமிதமும், தன்னை தேசத்தின் மீட்பனாகக் கற்பித்துக் கொண்ட மோடி என்ற வெட்கங்கெட்ட அற்பவாதியின் சுய விளம்பர மோகமும் கூடிப் பெற்றெடுத்திருக்கும் கேலிக்கூத்துக்குப் பெயர் – “சர்வதேச யோகா தினம்.
செல்ஃபியாசனம்“கழிவறைக்கு ஒரு ஐ.நா. தினம் இருக்கும்போது, யோகாவுக்கு ஒரு தினம் இருக்கக்கூடாதா?” என்று கேட்டிருக்கிறார் ரவி சங்கர்ஜி. பொருத்தமான கேள்விதான்!
வருடம் 365 நாட்களுக்கும் ஏதாவது ஒரு தினம் என்று ஐ.நா. அறிவிக்கத்தான் செய்கிறது. இப்படி ஐ.நா. அறிவிக்கும் தினங்கள் குறித்து யாரும் பெருமை கொள்வதில்லை. ஆனால், மோடி பெருமை கொள்கிறார். “இது உலக அரங்கில் இந்தியா பெற்றிருக்கும் அங்கீகாரம்” என்றும், “இதன்மூலம் பாரதம் உலகத்துக்கே வழிகாட்டுகின்ற விசுவ குரு” ஆகிவிட்டதாகவும் பீற்றிக் கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரி தன்னைத்தானே ஜெகத்குரு என்று கூறிக்கொள்வதைப் போல!
விவகாரம் இத்துடன் முடியவில்லை. பிரதமர் பதவியை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்குக் கிடைத்த குறுக்கு வழியாகப் பயன்படுத்துகிறார் மோடி. ஜூன் 21 அன்று டில்லியில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் யோகாசனம் செய்தார்களாம்; 84 நாடுகளைச் சேர்ந்தோர் இந்நிகழ்வில் பங்கேற்றார்களாம்; இப்படி இரண்டு கின்னஸ் சாதனைகள் யோகா தினத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றனவாம். உலகிலேயே “பெரிய மீசை”, “பெரிய நகம்” வளர்த்து கின்னஸில் இடம்பிடித்த இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களாவது இச்சாதனைகளுக்காக சோந்த முறையில் ‘முயற்சி’ செய்திருக்கிறார்கள். பிரதமர் மோடியோ பயில்வான் படத்தின்மீது தனது மூஞ்சியை வரைந்து கொண்ட 23-ஆம் புலிகேசியைப் போல, அரசு எந்திரத்தை ஏவி வரலாறு படைத்திருக்கிறார்.
(மேலும் படிக்க)
சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !
————————————————————————-

மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை

jaggi-vasudev-1யோகா தினத்தை ஐ.நா அங்கீகரித்த மாதத்தில் பல்வேறு தினங்களும் உள்ளன, ரசிய மொழி தினம் அவற்றில் ஒன்று. ஒரு மாதத்தில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட தினங்கள் இப்படி ஐ.நா-வால் ‘கொண்டாடப்’ படுகின்றன. அந்தந்த நாடுகளைச் சேர்ந்தோர் இதை உலகமே கொண்டாடுவதாக பீற்றுவது விளம்பரச் செலவைப் பொறுத்தது. கூடுதலாக ஸ்வயம் சேவக அம்பிகள், ‘இந்த தினம்தான் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவார் செத்துப்போன நாள், இதையே கொண்டாடுமாறு உலகத்தை மாற்றிவிட்டார் மோடி’ என்று பெருமையடிக்கிறார்கள். செத்ததுக்கு கொண்டாட்டம் என்றால் நாமும் கூட கொண்டாடலாம்.
செல்ஃபி புகழ் மோடி தனது போட்டோ மற்றும் செல்ஃபிக்கள் இணையத்தில் கண்டபடி கிண்டலடிக்கப்படுவதால், இம்முறை பல்லாயிரம் பேரைக் கூட்டி வைத்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்திருக்கிறார்.
இந்த நேரத்தில் யோகா வியாபாரத்தின் ஒரிஜினல் முதலாளிகளான ஜக்கி, ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் குருக்கள் தமது வழக்கமான முறுக்கும் எள்ளுருண்டயும் விற்று கல்லா கட்டியிருக்கிறார்கள்.
தன் ஜிப்பா பாக்கெட்டில் மட்டுமே இருக்கும் ஒரிஜினல் அக்மார்க் யோகாவை தன் வாழ்நாளுக்குள் விற்று தீர்த்துவிடும் லட்சியத்தைக் கொண்ட, யோக உலகின் ஸ்டீவ் ஜாப்ஸான தொழிலதிபர் ஜக்கி இந்த அளப்பரிய வாய்ப்பை எப்படி பயன்படுத்தினார்?
(மேலும் படிக்க)
மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை
வினவு பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள் மற்றும் கேலிச்சித்திரங்கள்.

இது அம்பானிகளின் தேசம் !

”நாம் கட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை. நல்ல வேட்பாளர்களாகப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழல் செய்யும் கட்சிகளை ஓட்டுப் போடுவதன் மூலம் தண்டித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதே போல், ஒரு சில அதிகாரிகள் லஞ்ச ஊழல் புரியும் அயோக்கியர்களாக இருக்கலாம். ஆனால், நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். சகாயம், உமா சங்கரைப் போல. அவர்களைப் போன்ற அதிகாரிகளைப் போற்ற வேண்டும். இங்கே சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது. ஒருவேளை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறு செய்தால் நீதி மன்றத்தை நாடலாம். கட்டாயம் நீதி வெல்லும். சத்ய மேவ ஜெயதே. ஜெய் ஹிந்த்”.
என்றெல்லாம் நம்மைச் நம்பச் சொல்கின்றன முதலாளிய ஊடகங்கள். இந்த இன்பக் கனவு அவ்வப் போது கலையும் போதெல்லாம் யாராவது ஒரு அண்ணா ஹசாரே – அரவிந்த் கேஜ்ரிவாலை களமிறக்கி கழுத்தில் ஈரத் துணியைச் சுற்றுகின்றன ஊடகங்கள் – கத்தியோடு பின் தொடர்கிறார் மோடி.
உண்மை என்ன?
நாம் ஒரு மேட்ரிக்ஸ் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே அரசு எப்படி நடக்கிறது, அதிகாரிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அரசியல்வாதிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அரசியல் கட்சிகள் எப்படிச் செயல்படுகின்றன, நீதிபதிகள் எப்படிச் செயல்படுகின்றனர், நீதி மன்றங்கள் எப்படிச் செயல்படுகின்றன, அங்கே கிடைக்கும் “நீதி” எத்தகையது, அரசின் திட்டங்களும் நிதிக் கொள்கைகளும் யாருக்காக, எப்படி வகுக்கப்படுகின்றன – எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன, இவற்றையெல்லாம் யார் இயக்குவது என்பதைக் குறித்த உண்மைகள் மிக அரிதான தருணங்களில் ’கசிந்துள்ளன’.
சுமார் ஏழாண்டுகளுக்கு முன் அவ்வாறு வெளியானது தான் நீரா ராடியா நடத்திய பேரங்களின் இரகசிய தொலைபேசி உரையாடற் பதிவுகள்.
இதோ இப்போது அதனினும் அசிங்கமான சில உண்மைகளை அவுட்லுக் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
எஸ்ஸார் டேப்ஸ்
essar
படம் நன்றி : அவுட்லுக்
அல்பசித் கான் என்பவர் எஸ்ஸார் குழுமத்தில் 1999 முதல் 2011-ம் ஆண்டு வரை தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். ரூயா குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் உள்ள எஸ்ஸார் குழுமம் எரிவாயு, இரசாயனம், தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகளில் கால் பதித்து இதே துறைகளில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தைப் போட்டியாளராக உள்ளது.
எஸ்ஸார் நிறுவனத்தில்1999-ம் ஆண்டு பணிக்குச் சேரும் அல்பசித் கானுக்கு 2001-லிருந்து 2006-ம் ஆண்டு வரை இரகசியமான ஒரு பணி ஒப்படைக்கப்படுகிறது. எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த பி.பி.எல் செல்பேசி சேவையைப் பயன்படுத்தும் சில முக்கியமான மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், அப்போதைய பாரதிய ஜனதாவின் மத்திய அமைச்சர்கள் மற்றும் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் அம்பானி சகோதரர்களின் தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக பதிவு செய்வதே அந்த இரகசிய உளவு வேலை.
அதை திறம்படஅல்பசித் கானும் நிறைவேற்றுகிறார். பதிவு செய்யப்பட்ட இரகசிய உரையாடல்களை தனது முதலாளிகளிடம் ஒப்படைத்ததுடன், தனது எதிர்கால பாதுகாப்பு கருதி தனியே பிரதிகள் எடுத்து பாதுகாத்துள்ளார். பின், உளவு வேலைக்கான தேவை முடிந்து போன நிலையில் 2011-ல் வேறு சில சில்லறைக் காரணங்களை முன்வைத்து அல்பசித் கான் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்.
அதன் பிறகு அல்பசித் கான், தன் வசம் உள்ள உரையாடற் பதிவுகளின் பிரதிகளோடு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுரேன் உப்பலை நாடுகிறார். பதிவு செய்யப்பட்ட இரகசிய உரையாடல்களை கேட்டு அதிர்ந்து போன சுரேன் உப்பல், உடனடியாக பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் தகவல் தெரிவிக்கிறார். மேலும், எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு சட்டப்படியான நோட்டீஸ்களையும் அனுப்புகிறார்.
இதற்கிடையே சுரேன் உப்பலை சரிக்கட்டி இரகசியப் பதிவுகளை அமுக்கும் முயற்சியில் ரூயா சகோதரர்கள் நேரடியாக இறங்கியுள்ளனர். நேரடியாக பேரம் பேசிப் பார்த்தும் அவர் மசியாததால், தமது முன்னாள் ஊழியர் அல்பசித் கானை சரிக்கட்டி விடுகின்றனர். அதைத் தொடர்ந்து அல்பசித் கான் வழக்கறிஞர் சுரேன் உப்பல் உடனான தொடர்புகளை முறித்துக் கொள்கிறார். என்றாலும், தன் வசம் அல்பசித் கான் ஏற்கனவே வழங்கிய ஆதாரங்களை ஊடகங்களின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார் சுரேன் உப்பல்.
என்ன சொல்கின்றன அந்த உரையாடல்கள்?
அம்பானி சகோதரர்கள்
அம்பானி சகோதரர்கள்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி சதீஸ் சேத்திடம் 01.12.2002 அன்று பேசிய முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக பிரமோத் மகாஜன் மூலமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சரிக்கட்டுவது தொடர்பாக பேசியுள்ளார். மேலும் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்றுமொரு உயரதிகாரியும், ராஜ்ய சபை உறுப்பினருமான பாரிமன் நாத்வாதியிடம் பி.எஸ்.என்.எலின் செல்பேசிக் கட்டனங்கள் நிர்ணயிப்பதில் ரிலையன்ஸ் எவ்வாறு பங்காற்றியது என்று சதீஸ் சேத் விவரித்துள்ளார்.
தகவல் தொடர்புத் துறையின் முன்னோடியாக அன்று விளங்கிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் எப்படி படிப்படியாக சீர்குலைக்கப்பட்டது, அதற்கு தேசபக்தி வேடம் போடும் பாரதிய ஜனதா எப்படி அடியாள் வேலை பார்த்தது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. தரம்தான் தனியார் சேவை என்பது தான் தனியார்மய தாசர்களின் வாதம். ஆனால் அந்த தரத்தின் தரத்தை அம்பலப்படுத்துகிறது இந்த உரையாடல்.
மேலும், தனது போட்டி நிறுவனமான பி.பி.எல்லின் நிறுவனர் ராஜீவ் சந்திரசேகருக்கு 100- 200 கோடி ரூபாயை கொடுத்து செல்பேசி நிறுவனங்களின் கூட்டமைப்பை (COAI) ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமான முறையில் பிளவு படுத்தும் திட்டம் குறித்து அம்பானியும் சதீஸ் சேத்தும் விவாதித்துள்ளனர்.
அதே போல், 22.11.2002 அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு உயரதிகாரியான சங்கர் அத்வாலிடம் பேசிய அம்பானி, தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் உள்ள சில கோப்புகளை களவாடியதன் மூலம் தாம் அரசுக்குச் செலுத்த வேண்டிய 1,300 கோடி ரூபாய் வரியைத் தவிர்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுரேன் உப்பால்
சுரேன் உப்பால்
படம் நன்றி : அவுட்லுக்

மேலும், அப்போது தொலைத்தொடர்பில் ரிலையன்ஸ்சுக்கு போட்டியாளராக விளங்கிய சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனத்திற்கு சாதகமாக அன்றைய பாரதிய ஜனதா அரசின் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சர் பிரமோத் மகாஜன் எவ்வாறெல்லாம் தரகு வேலையில் ஈடுபட்டார் என்பது பல்வேறு உரையாடல்களின் மூலம் அம்பலமாகியுள்ளது. மகாஜன் தமக்கு கைக்கூலியாக இருப்பதற்கு பரிசாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர் ஷிவானி பட்னாகரின் கொலை வழக்கில் மகாஜனுக்கு சாதகமாக நீதிமன்றத்தை வளைக்க அம்பானி நேரடியாக உதவி செய்துள்ளார்.
மேலும், அன்றைய பாரதிய ஜனதா அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக், ரியலைன்சுக்கு ஆதரவாக பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களை சீரழிப்பது குறித்து அம்பானிகள் நேரடியாக அமைச்சருக்கு வகுப்பே எடுத்துள்ளனர். கோதாவரி இயற்கை எரிவாயு – கே.ஜி பேசின் வழக்கில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அம்பானிகளுக்கு ஆதரவாக சரிக்கட்டியுள்ளனர். பாரதிய ஜனதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் அலுவலகத்திலும் நிதியமைச்சகத்திலும் பணிபுரிந்த மத்திய அரசின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் துணையோடு பட்ஜெட் அறிக்கையையே தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். அமர் சிங்கின் துணையோடு பாரளுமன்ற உறுப்பினர்களை விலை பேசியுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பல்வேறு வழக்குகளுக்காக விலைக்கு வாங்கியுள்ளனர். பாராளுமன்ற நிலைக்குழுக்களில் யார் உறுப்பினராக இருக்கலாம், அது என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் அம்பானியே நேரடியாக தீர்மானித்துள்ளார்.
தொகுப்பாக பார்த்தால்,
இங்கே நிலவும் ஜனநாயகம் மக்களுக்கானதல்ல. நிதி, நீதி, நிர்வாகம், இராணுவம், போலீசு என்று அரசு கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு அங்கமும் முதலாளிகளுக்கானதாகவே இருப்பது துலக்கமாக வெளிப்பட்டுள்ளது. மக்களின் இறுதி நம்பிக்கையாக உள்ள நீதிமன்றங்களோ அம்பானிகளின் கழிவறைகளாக உள்ளன. தேர்தலில் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து அனுப்பும் பாராளுமன்றமோ அம்பானிகள் மலம் துடைத்துப் போடும் குப்பைத் தொட்டியாக உள்ளது.
மேற்கண்ட உரையாடல் பதிவுகள் வெளியாகி வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் 56 இன்ஞ்ச் மார்பு கொண்ட பிரதமர் வாய் திறக்கவில்லை. “தின்னவும் மாட்டேன் தின்ன விடவும் மாட்டேன்” என்று வாய்கிழிய பேசி அதிகாரத்தைப் பிடித்த மோடி உண்மையில் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் தரகு முதலாளிகளின் கைக்கூலி என்பது எண்ணற்ற சந்தர்ப்பங்களில் ஏற்கனவே அம்பலப்பட்டிருக்கிறது. அதானியின் விமானத்தில் பறக்கிறவர் மக்களுக்கு விசுவாசமாக இருப்பார் என்று யாரையும் இனி நம்ப வைக்க முடியாது.
தேர்தல், காங்-பா.ஜ.க, இதர கட்சிகள், பாராளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை அனைத்தும் முதலாளிகளின் சேவைக்கு காத்திருக்கும் அடிமைகள் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதால் நாம் மாற்றை இந்த அமைப்பில் தேட முடியாது.  மக்களை திரட்டி புதிய அமைப்பை படைப்போம்!
–    தமிழரசன்.

ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!



ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!

in Uncategorized by வினவு, July 22, 2010

வறுமையின் இறுதி எல்லையிலே இருப்பவர்களது எண்ணிக்கையே 42 கோடி என்றால் வறுமையின் மற்ற வகைகளில் இருப்பவர்களது எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?
http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/indian-poverty.jpg
சமீபத்தில் தலைநகர் புதுதில்லியில் புதிதாகத் திறந்த விமான முனையத்தை பற்றி ஊடகங்கள் வியந்து முழுப் பக்க கவரேஜூடன் புளகாங்கிதம் அடைந்தன. உலகத்தரம், 13,000 கோடி செலவு, பல இலட்சம் பயணிகளை சமாளிக்கலாம் என்று இந்திய தேசபக்தி பீரிட்டு வழிந்தது. இந்த முனையத்தில் வந்திறங்கிய விமானங்களை தூறல் பொழிந்து வரவேற்றார்கள்.
ஆனால் இதே தில்லியில் சில மாதங்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஏற முயன்ற நெரிசலில் சிலர் மிதிபட்டு இறந்தனர். ஏழைமக்கள் பயன்படுத்தும் ரயிலில் இடமில்லை. பிசினஸ் கிளாசில் கண்டம் விட்டு கண்டம் பறக்கும் கனவான்களுக்கு 13,000 கோடி செலவு.
புது தில்லியில் விரைவில் ஆரம்பிக்கப் போகும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக பல ஆயிரம் கோடி செலவில் கட்டுமானப்பணிகள் மும்மூரமாக நடந்த வண்ணம் உள்ளன. உலக அளவில் மதிப்பே இல்லாத இந்த போட்டிக்காக பல ஆயிரம் மக்களது சேரிப்பகுதிகள் இரக்கமின்றி துடைத்தெறியப்பட்டு நகரத்திற்கு வெளியேதூக்கி எறியப்பட்டுள்ளன. தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கூட ஏமாற்றி இந்த விளையாட்டுப் போட்டிக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவில் வறுமை கோரத்தாண்டவமாடுகிறது என்றால் செல்பேசி, வாகனங்கள், டி.வி என்று திசைதிருப்பும் அறிவாளிகளுக்கு ஆப்பு வைக்கும் வண்ணம் ஒரு செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஏழைகள் தற்போது அதிகம் பெருகியிருக்கிறார்கள்.
.நா வளர்ச்சித் திட்டத்தின் உதவியுடன் ஆக்ஸ்ஃபோர்டைச் சேர்ந்தவறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சிஎன்ற அமைப்பு, “பன்முக வறுமைக் குறியீடுஎன்ற அறிக்கையின் மூலம் ஒரு உண்மையைக் கூறியிருக்கிறது.
அதன்படி இந்தியாவில் உள்ள பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சேர்த்து 42 கோடியே  பத்து இலட்சம் மக்கள் ஏழைகளாக வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை என்பது ஆப்ரிக்காவில் உள்ள 26 நாடுகளில் வாழும் 41 கோடி ஏழைகளைக் காட்டிலும் அதிகம் என்று சொல்கிறது அந்த அறிக்கை.
ஆகவே இனி ஏழ்மைக்கும், வறுமைக்கும் ஆப்ரிக்காவை சொல்லாமல் இந்தியாவைச் சொல்வதே பொருத்தமானது. வறுமையின் இறுதி எல்லையிலே இருப்பவர்களது எண்ணிக்கையே 42 கோடி என்றால் வறுமையின் மற்ற வகைகளில் இருப்பவர்களது எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?
தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற மூன்று கொடுமைகளின் சாதனைதான் இந்த 42 கோடி ஏழைகள். இனியும் இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் செல்பேசி வைத்திருக்கிறார்கள் என்பதால் ஏழைகளே இல்லை என்று கூசாமல் பொய் சொல்பவர்களுக்கு ஆப்பு வைக்கும் வண்ணம் ஒரு கட்டுரை விரைவில் வினவில் வரும்.
இந்தியாவின் ஏழ்மை விகிதம் விரைந்து வளர்வதைப் போலவே பில்லியனர்களின் வருமானமும் அதிகரித்தே வருகிறது. ஒன்றின் இழப்பில் மற்றது பெருக்கிறது. பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் ஏழ்மையில் உழலும்போதுதான் சிறுபான்மை முதலாளிகள் கொழுக்க முடியும். இந்த விதியை என்று அடித்து நொறுக்குகிறோமோ அதுவரை ஏழைகளுக்கு விடிவு இல்லை.
இதுபற்றி ஹிந்து பேப்பரில் வந்துள்ள நேர்காணல்: Media hype and the reality of “new” India