Thursday, 23 June 2016

ராமன் – மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை !


ராமன்மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை !
by வினவு, June 23, 2016
ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசை குறிப்பாக மோடி, ஸ்மிருதி ராணி கும்பலை விமரிசித்திருக்கிறார்.

magesh-guru
பேராசிரியர் மகேஷ் குரு
மைசூர் பல்கலையில் பத்திரிகையியல் துறை பேராசிரியாக பணிபுரிபவர் மகேஷ் குரு. அயோத்தி ராமனை ஜனவரி 2015-ல் இழிவுபடுத்தி பேசியதாக இவர் மீது வழக்கு தொடுத்ததுகர்நாடு சர்வோதயா சேனாஎனும் இந்துத்துவ வெறி கொண்ட ஒரு பெயர்ப்பலகை அமைப்பு. அப்படி அவர் என்ன பேசினார்?
மனைவி சீதாவிடம் கடவுள் ராமன் அநீதியாக நடந்து கொண்டான் என்ற அனைவரும் அறிந்த உண்மையை அவர் பேசியதுதான் அந்த இழிவுபடுத்தலாம். அயோக்கியர்கள். இந்த வழக்கில்தான் பிணை கேட்டு வந்தவரை சிறையில் அடைத்திருக்கிறது மைசூர் நீதிமன்றம். ஏன்?
அயோக்கிய ராமனின் வண்டவாளத்தை எடுத்து வைத்த பேராசிரியர் இந்த ஆண்டு ஜனவரியில் ரோகித் வெமுலாவிற்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய சில விமரிசனங்களுக்காகஅகிலா கர்நாடகா டாக்டர் அம்பேத்க்ர் பிரச்சார சமிதிஎனும் இந்துத்துவ வெறி கொண்ட பெயர்ப்பலகை அமைப்பு வழக்கு தொடுத்திருக்கிறது. என்ன விமரிசனங்களை பேசினார்? ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசை குறிப்பாக மோடி, ஸ்மிருதி ராணி கும்பலை விமரிசித்திருக்கிறார்.
மகிஷாசுரனது தியாக தினத்தை கொண்டாடிய பேராசிரியர் மீது இந்துமதவெறியர்களுக்கு எவ்வளவு வெறி இருக்கும் என்பது சொல்லி விளக்க வேண்டியதில்லை. ரோகித் வெமுலா பிரச்சினையில் பாராளுமன்றத்தில் உறுமிய ஸ்மிருதி ராணி, அசுரனைக் கொன்ற துர்க்கையை நிந்திக்கிறார்கள் என்று குற்றப்பட்ட்டியல் படித்தவராயிற்றே!
ரோகித் வெமுலா பற்றிய கூட்டத்தில் மோடியையோ, ஸ்ம்ருதி ராணியையோ பாராட்டியா பேச முடியும்? காந்தி கூட்டத்தில் கோட்சேவை விமரிசிக்க கூடாதாம் இவர்களுக்கு! இப்படி இன்னொரு வழக்கில் இவர் இருப்பதால் பிணை கிடையாது என்று சிறைக்கு அனுப்பியிருக்கிறதுகுமாரசாமிகள்வாழும் மைசூர் நீதிமன்றம்.
சில பத்தாண்டுகளாக பேராசிரியர் பணியில் இருக்கும் குரு, மத்திய மற்றும் மாநில பப்ளிக் கமிஷன்  சர்வீஸ் கமிஷனிலும் பணியாற்றியிருக்கிறார். தற்போது மைசூர் நீதிமன்றம் இவரை இடை நீக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் இந்துமதவெறியர்களை எதிர்த்தால்,பேசினால், எழுதினால் இதுதான் தண்டனை என்று அறிவுத்துறையினரை அச்சுறுத்துகிறார்கள்.
எனில் நரவேட்டை மோடியையும், பார்ப்பன வெறி ஸ்மிருதி ராணியையும், அயோக்கியன் ராமனையும் ஆயிரம் முறை விமரிசிப்போம்.

No comments:

Post a Comment