சற்று வரலாறு அறிவோம்

Thursday, 23 June 2016

அன்னிய நேரடி முதலீடு(FDI)

அன்னிய நேரடி முதலீடு
https://ta.wikipedia.org/s/40gd

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னிய நேரடி முதலீடு (Foreign direct investment, FDI) ஒரு நாட்டில் மற்றொரு நாட்டு நபரோ நிறுவனமோ தயாரிப்பு அல்லது வணிகத் துறையில் நேரடியாக முதலீடு செய்வதாகும். இத்தகைய முதலீடு அந்நாட்டில் உள்ளதோர் நிறுவனத்தை வாங்குவதன் மூலமோ அல்லது தனது நிறுவனத்தினை விரிவுபடுத்துவதாலோ இருக்கலாம். இது அந்த நாட்டு நிறுவனங்களின் பங்குகளிலோ அல்லது பிணைப்பத்திரங்களிலோ முனைப்பற்ற முதலீடு செய்வதல்ல.

பொருளடக்கம்

  • 1 வரையறைகள்
  • 2 வகைகள்
  • 3 மேற்சான்றுகள்
  • 4 வெளியிணைப்புகள்

வரையறைகள்

பொதுவாக, அன்னிய நேரடி முதலீட்டில் "இணைப்புகளும் கையகப்படுத்தல்களும், புதிய வணிக வாய்ப்புகளுக்கான கட்டமைப்பை உருவாக்குதல், வெளிநாட்டில் கிடைத்த இலாபங்களை முதலீடு செய்தல், நிறுவனங்களுக்கிடையேயான கடன் வழங்குதல்" போன்றவை அடங்கும்.[1] குறுகிய வரையறுப்பில், அன்னிய நேரடி முதலீடு புதிய கட்டமைப்பை (தொழிற்சாலைகள், ஆய்வகங்கள், அலுவலகங்கள்) உருவாக்குவதை மட்டுமே குறிக்கும். எனவே வெவ்வேறு வரையறுப்புகளின் கீழுள்ள அன்னிய முதலீட்டு மதிப்பீடுகளை ஒப்பு நோக்குதல் கடினமே.
ஒரு நாட்டின் தேசியக் கணக்குப் புத்தகங்களிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சமன்பாட்டிலும் Y=C+I+G+(X-M) [நுகர்வு + மொத்த (மொத்த உள்நாட்டு+மொத்த வெளிநாட்டு) முதலீடு+ அரசு செலவினம் +(ஏற்றுமதி - இறக்குமதி)], அன்னிய நேரடி முதலீடு என்பது நிகர உள்வரும் முதலீடாக (உள்வரவிலிருந்து வெளியேறும் செலவைக் கழித்து) வரையறுக்கப்படுகிறது; இத்தகைய நிகர உள்ளீடு முதலீட்டாளரின் நாட்டில்லில்லாத வேறொரு பொருளாதாரத்தில் உள்ள நிறுவனத்தில் நிரந்த மேலாண்மை ஆர்வத்தை (10 விழுக்காடு அல்லது அதற்கு மேலான வாக்குரிமைப் பங்குகளை) பெறுவதற்காக இருத்தல் வேண்டும்.[2] அனிய நேரடி முதலீடு என்பது பங்கு முதலீடு, மற்ற நீண்டகால முதலீடு, குறுங்கால முதலீடு ஆகியவற்றின் மொத்தமாகும்; இது வரவுச்செலவு சமநிலையில் காட்டப்படும். அன்னிய நேரடி முதலீடு மூலமாக மேலாண்மையில் பங்கேற்றல், கூட்டு நிறுவனங்கள், தொழினுட்ப்ப் பரிமாற்றம் மற்றும் நுண்திறமை கூடுகிறது. அன்னிய நேரடி முதலீட்டின் மூலதனப் பங்கு ஓர் குறிப்பிட்ட காலத்தில் நிகர (i.e. உள்வரவு - வெளிப்போக்கு) திரள் அன்னிய நேரடி முதலீடாகும். வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகாது.[3] உற்பத்திக் காரணிகள் பன்னாட்டளவில் பரிமாற்றம் கொள்வதற்கான ஓர் எடுத்துக்காட்டு அன்னிய நேரடி முதலீடாகும்.

வகைகள்

  1. கிடைநிலை அன்னிய நேரடி முதலீடு - ஓர் நிறுவனம் தனது நாட்டில் செய்துவந்த அதே தொழில் முனைப்பை அதே தயாரிப்பு சங்கிலிகளுடன் மற்ற நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டின் மூலமாக மீள் உருவாக்குதல்.[4]
  2. அடித்தள அன்னிய நேரடி முதலீடு - தன்னுடைய நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் அன்னிய முதலீடு செய்வதன் மூலமாக மூன்றாம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தல்.
  3. நெடுக்கைநிலை அன்னிய நேரடி முதலீடு தனது தயாரிப்புச் சங்கிலிக்கு கீழுள்ள அல்லது மேலுள்ள பொருட்களை அன்னிய நேரடி முதலீடு மூலமாக மற்ற நாட்டில் உருவாக்குதல். அதாவது தனது தயாரிப்பிற்கு வேண்டிய மூலப் பொருட்களை அன்னிய நாட்டில் தயாரித்தல் அல்லது தனது செய்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட மதிப்புக் கூடிய பொருட்களை அன்னிய நாட்டில் தயாரித்தல். [4]

மேற்சான்றுகள்


  • "China Edges Out U.S. as Top Foreign-Investment Draw Amid World Decline". Wall Street Journal. 2012-10-23.
    1. "What is Foreign Direct Investment, Horizontal and Vertical « Knowledge Base". Guidewhois.com. பார்த்த நாள் 2012-11-17.

    வெளியிணைப்புகள்

    • "Foreign Investment in the United States". Concise Encyclopedia of Economics (1st). (2002). Ed. David R. Henderson (ed.). Library of Economics and Liberty.  OCLC 317650570, 50016270 and 163149563
    • Foreign Direct Investment in the United States. Transactions.
    • Foreign Direct Investment in the United States Department of Commerce and Council of Economic Advisers
    • OECD Benchmark Definition of Foreign Direct Investment (2008)
    • IMF: How Countries Measure FDI (2001)
    • Tracking cross-border investments using applied onomastics
    Posted by சி பழனி at 00:40
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Contact Form

    Name

    Email *

    Message *

    Total Pageviews

    Search This Blog

    About Me

    My photo
    சி பழனி
    View my complete profile

    Blog Archive

    • ▼  2016 (23)
      • ▼  June (23)
        • ராமன் – மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு ச...
        • இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?
        • ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு யோகா – பன்னாட்டு நிறுவனங்களுக்கு...
        • இது அம்பானிகளின் தேசம் !
        • ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!
        • அந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்!
        • அந்நிய முதலீட்டில் இந்திய வல்லரசு !
        • அன்னிய நேரடி முதலீடு(FDI)
        • ஒரு கம்யூனிசவாதியின் கேள்விக்கு கோரக்கதாசனின் பதில...
        • யாரறிவார் இயற்கையை... மு.குருமூர்த்தி
        • பேரண்டம் தோன்றுவதற்கு எது முதல் காரணம்? முனைவர். க...
        • சூரியக் குடும்பம் நல்லான்
        • ஹபீப் தன்வீர் -“நாடகம் எனது பிறப்புரிமை!” சோழ.நாகர...
        • பகத்சிங் குறித்து காந்தியும், ஆனந்த விகடனும்
        • காந்தி மகான் அல்ல; மக்கள் விரோதி!
        • கோட்சே வாக்குமூலம்
        • பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்
        • சௌரி சௌரா
        • ''1947''
        • பீரங்கி வாயில் இந்திய சிப்பாய்கள்
        • இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு
        • இந்திய மாநிலங்கள் அமைந்த கதை!
        • இந்தியா தோற்றம்
    Simple theme. Powered by Blogger.