Saturday, 18 June 2016

பகத்சிங் குறித்து காந்தியும், ஆனந்த விகடனும்


Bhagat Singhஆனந்த விகடன் - அன்றே

பிரிட்டிஷ் இந்தியாவில் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய பகத்சிங்கையும், அவரது தோழர்களையும் “முழுமூட சிகாமணிகள்” என்று ஆனந்த விகடன் அன்று பரிகசித்து எழுதியது.

அகிம்சையின் உருவம்

காந்தி-இர்வின் ஒப்பந்தம் காங்கிரஸ் மகாசபையில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பகத்சிங் மீதான லாகூர் சதி வழக்கும் அதன் தீர்ப்பும் தடையாகிவிடும் நிலைமை இருந்தது. அப்போது, “அந்த பையன்களை தூக்கிலிட வேண்டுமென்றால் கராச்சி காங்கிரஸ் கூடுவதற்கு முன்பே தூக்கிலிடுவது நல்லது” என்று பிரிட்டிஷாரிடம் காந்தி சொன்னதாக, காந்தியின் வலதுகரமாக விளங்கிய பட்டாபி சீத்தாராமையா எழுதிய காங்கிரஸ் மகாசபை சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
(ஆதாரம்: ‘வீர சுதந்திரம் வேண்டி..’ நூல்)

No comments:

Post a Comment