மு.குருமூர்த்தி
மையத்திலிருந்து சுமார் 100,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால், கேலக்ஸியின் மெல்லிய சாட்டைபோன்ற நீட்சிகளில் ஒன்றில் புதிதாக ஒரு சூரியன் பிறந்துகொண்டிருப்பது தெரிந்தது. தெற்கு கதிர்ச்சக்கர கேலக்ஸி (Southern pinwheel Galaxy) என்று அழைக்கப்படும் (M 83 என்பது அதன் விண்ணியல் பெயர்) ஒரு கேலக்ஸி இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த மிகவும் பிரகாசமான நட்சத்திரக்கூட்டம்.
M 83 ன் விட்டமே 40,000 ஒளி ஆண்டுகள்தான். இதன் மையத்திலிருந்து 140,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் புதிய விண்மீன் உதித்துக்கொண்டிருப்பது அதிசயமாக இருக்கிறது. 'இயற்கை இப்படித்தான்' யாராலும் உறுதியுடன் சொல்லமுடியாது போலிருக்கிறது.
கலைக்கதிர், ஜூலை 2008
No comments:
Post a Comment