Wednesday, 22 June 2016

ஒரு கம்யூனிசவாதியின் கேள்விக்கு கோரக்கதாசனின் பதில்கள்.

 மதவாதிகள் எப்படி இருப்பார்கள் என்பதற்க்கு இது ஒரு உதாரணம் (மாற்றி பேசும் திறன்)

Tuesday, June 21, 2016

ஒரு கம்யூனிசவாதியின் கேள்விக்கு கோரக்கதாசனின் பதில்கள்.



        இந்த பேசும் பிரபஞ்சம் என்னும் இணையப்பக்கத்தில் நான் வெளியிட்ட கட்டுரைகளில் நபி கண்ட மறுமை என்ற கட்டுரையிலும் இறுதியிலும் இறுதியாக இறுதிகால காட்சிகளை இறக்கி வைக்கும் வடலூர் வள்ளலாரின் தீர்க்கதரிசனங்கள் என்ற கட்டுரையிலும் ஒரு கம்யூனிசத் தோழர் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டப்போது அந்த கட்டுரைகளில் அந்த கேள்விக்குரிய பதிலை பதிவு செய்திருக்கிறோம். அதை படித்த வாசகர்கள் இதை நீங்கள் எழுதும் கட்டுரையாக பிரசுரித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டதின் பேரில் அந்த கட்டுரைகளை இதில் இணைத்துள்ளோம் (அந்தப்பதில் கடிதத்தில் அவரைப்பற்றிய தனிப்பட்ட விஷயங்களை தவிர்த்து) தேவையானவைகளை மட்டும் ஒரு கட்டுரையாக வெளியிடுகிறோம்.

கம்யூனிஸவாதி கேட்டக்கேள்வி பின்வருமாறு :கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்- சி. பழனி

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தனி வார்ப்பு ; தனித்தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள்; உலகப் பாட்டாளி வர்க்கப் படையின் நேர் நிகர்ற்ற போர்த்தந்திரியான தோழர் லெனின் அணியில் அங்கத்தினர்கள். இந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதைவிட, சிறந்த பெருமை எங்களுக்கு வேறெதும் இல்லை- தோழர் ஸ்டானின் உரையிலிருந்து. துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வும் மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு,ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்ட்தாய் இருக்கிறது.
பாவ புண்ணிய்க் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முட்ங்கி விடுவதா, இல்லை அறிவியல்பூர்வமான விடைகளைக் கண்டடைவதா? அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்றடையும் இடம் மார்க்சியமே வேறில்லை- தோழர் பாரதிநாதனின் கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலின் அடிகோலில் இருந்து.

இப்படி நான் கம்யூனிஸ்டுகளின் தேவையை அடுக்கி கொண்டே போகமுடியும், நான் உங்களிடம் முன் வைக்கும் கேள்விக்கு பதில் கூற முடியுமா? உங்கள் வாதபடியே கடவுள் இருந்தால் ஏழை பணக்காரன் சுரண்டுபவன் சுரண்டபடுபவன் எதற்க்கு படைத்தான் நான் மேலே சொன்னவையே ஒருசாரார் வாழவழியற்று இருக்க மருபுறம் சிலர் என்றும் வாழையடி வாழையாக மற்றவர்களின் வாழ்வை சுரண்டி செழுமையாக வாழும் நிலைக்கு எந்த கடவுள் காரணம்.....

வீண் விவாதம் இன்றி பதில் வேண்டும்......

இதோ பதில்:  தங்கள் கடிதத்தைக் கண்டேன். நீங்கள் நபி கண்ட மறுமை என்ற ஆய்வுக்கட்டுரையில் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். வினாவை எழுப்பி வீண் விவாதம் இன்றி விடையை கேட்டஉங்களுக்கு முதலில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுவது நான் எழுதிய ஆய்வுக்கட்டுரைக்கு உள்ள விமர்சன பகுதியில் அந்த கட்டுரைக்கு எள்ளளவும் சம்பந்தபடாத பொருந்தாத வீணான கேள்விகளை வீணே வந்து கேட்டுவிட்டு வீண்வாதம் இன்றி விடைதர வேண்டும் எனக் கேட்டுநிற்கும் உங்களுக்கு சாட்டுநீட்டோலையாய் சங்கதிகளை உங்களுக்கு சல்தியாய் சொல்ல வேண்டியிருக்கிறது. நானும் இக்கட்டுரையில் மீண்டும் தேடிப்பார்த்தேன். உங்களுக்கு வந்த சந்தேகம் இக்கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. சம்பந்தம் இல்லாத இடத்தில் சம்பந்தம் இல்லாமல் கேட்கின்ற ஆட்களைப்பற்றி பொதுவாக மக்கள் அபிப்பிராயம் ஒருமனநோயாளி என்பதே. நான் ஏதோ ஏழை பணக்காரனை ஏற்படுத்தியவன் இறைவன் என நான் எழுதியதாய் கற்பனை செய்து கொண்டு சம்பந்தம் இல்லாமல் இந்த கேள்வியை கேட்டிருகிறீர்கள். அப்பொழுது தான் உங்கள் முகவரியை உங்கள் பெருமைகளை நீங்களே பெருமைபடுத்திக் கொண்டு சொல்லியிருக்கிறதைப் பார்த்தேன். நீங்கள் எப்படிபட்ட மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்துக்கொண்டேன். தங்களை பெருமை படுத்திக்கொள்ள சில பின்னணிகள் தேவைப்படுகிறது. சிலர் என் தாத்தா அப்படி வாழ்ந்தார் இப்படி வாழ்ந்தார் என்பான். நீ எப்படி வாழ்கிறாய் என்றால் அந்த பரம்பரை என்ற ஒன்றை தவிர அவனிடம் வேறெதுவும் காணப்படுவதில்லை வார்த்தை ஜாலங்கள் பேச்சில் நிற்பதால் மட்டும் பெருமை வந்துவிடாது.நீங்கள் தனி வார்ப்பு என்று சொல்லியிருக்கிறீர்கள். வார்ப்பான பொருள் சுயமாய் எதையும் செய்யும் சிந்தனை அற்றது. அதையும் ஒருவன் வார்ப்பாய் உருவாக்க வேண்டும். சாதாரண பார்ப்பாய் ஆகிநிற்கும் எங்களிடம் உங்கள் வார்ப்பும் எதிர்பார்ப்பும் எடுபடாத விஷயம். நீங்கள் சம்பந்தமில்லாது பேசுவதற்கு ஏதோ ஒரு காரணம் சம்பந்தமாய் இருக்க வேண்டும் என ஊகித்த போதுதான் உணரமுடிகிறது என்னவென்றால் எதை பெருமைக் கொண்டு பேசினீர்களோ அந்த கம்யூனிஸசித்தாந்தத்தின் அடிப்படை தத்துவ ஆக்கம் சர்வாதிகார சோஷலிசசித்தாந்தம். சர்வாதிகாரம் குடிகொண்ட இடம் ஒரு மனநோயாளியின் கூடாரமே.உங்கள் தத்துவமே சர்வாதிகார சோஷலிச சித்தாந்தம் என்ற இந்த சித்தாந்தம் உங்களையும் அறியாமல் மனநோய் புகுத்தி நிற்கும். அப்படி மனநோய் புகுந்து நிற்கிறது என்பதை நபிகண்ட மறுமை என்ற கட்டுரையிலே சம்பந்தம் இல்லாமல் பேசிநிற்பதை பார்க்கிறோம். நீங்கள் கம்யூனிஸவாதி தனித்தாதுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். அறிவியல் ரீதியாக உங்கள் உடலை சோதித்து பார்த்தால் உண்மை தெரியும் மனநோயாளி பிதற்றுவது போல் தனித்தாதுவால் ஆக்கப்பட்டவர்கள் பொருள் என்ன என்று . அத்தனை பேரும் மனித விந்து தாதுக்களால் உற்பத்தியாகி நிற்கும் மனித வர்க்கத்தில் மனிதரல்லாத தனிதாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள் என்று புரிகிறது.

             உலகப்பாட்டாளி வர்க்கப்படையின் நேர் நிகரற்ற போர் தந்திரியான தோழர் லெனின் அணியின் அங்கத்தினர் என்று சொல்லி இருக்கிறீர்கள். இங்கு கூட போர்த் தந்திரி என்று அடையாளமிட்டு குறிப்பிடுகிறீர்கள். போரினால் எந்த நல்ல முடிவும் ஏற்படுவதில்லை. ஆயுதமெடுத்தவன் ஆயுதத்தால் அழிகிறான். எனவே போர் என்ற வார்த்தை புனிதம் கொண்ட வார்த்தை அல்ல. சர்வாதிகாரிக்கே சங்கடத்தை ஏற்படுத்தி நிற்பது தான் இந்தப் போர். துயரில்லா வாழ்விற்கு போரில்லா வாழ்வுதான் சிறப்பு.எந்த நாடும் போரைக்கொண்டு நின்றால் மக்கள் வாழ்க்கை போராட்டத்தில் தானே இருக்கும். இப்படிப்பட்ட போரிலே தந்திரி என்று நாமம் சூட்டிக்கொள்கிறீர்கள். நல்ல வார்த்தையே உங்களுக்கு கிடைக்கவில்லையா. துயர வாழ்விற்கு இட்டுச்செல்லும் பேருக்கே தந்திரம் செய்பவன். தந்திரம் என்றாலே எத்தன் என்று பொருள் . பித்தன் கூட்டத்திற்கு ஒரு எத்தன் என்று பொருள்படும் நிலையில் உள்ளது.அறிவு கூர்மை இருந்தால் மட்டும் போதாது அது எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் தான் இருக்கிறது. துயரறியா வாழ்வும் துயரமான வாழ்வும் என ஏன் இருக்கிறது என்று கேட்டியிருக்கிறீர்கள். இப்படிபட்டப் போர் தந்திரியாக இருக்கும் வரை நாட்டில் துக்கமும் துயரமும் எப்படி ஓயும்.நீங்கள் உங்கள் தத்துவங்களுக்கு மூட்டை கட்டினாலே அமைதி தழுவும்.சர்வாதிகாரம் இருக்கும் இடம் துன்பத்தின் கூடாரமாய் இருக்குமேயொழிய இன்பம் காணும் இடமாக இருக்காது. அப்படியென்றால் அறிவார்த்தமான தேடலின் முடிவில் நாம் சென்றடையும் இடம் மார்க்ஸிஸமே வேறில்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனவே துன்பத்திற்கு இட்டுச்செல்லும் வழி உங்களுக்கு சென்றடையும் இடம் மார்க்ஸிஸமே என்ற உண்மையை ஒத்துக்கொள்கிறோம்.ஏழை பணக்காரனை ஏன் படைத்தார் என்று என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். சுரண்டுபவன் சுரண்டப்படுபவன் இறைவனால் ஏன் படைக்கப்பட்டார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். இந்த கட்டுரையிலே ஏழை , பணக்காரரை பற்றியோ துயரம் துயரமற்ற வாழ்வை பற்றியோ சுரண்டுபவர் சுரண்டபடுபவன் பற்றியோ கருத்தை நான் அறிவிக்காதபோது, இறைவன் தான் இவைகளை உருவாக்கினார் என்று உங்களிடம் நான் சொல்லாத விஷயத்தை நீங்களாக சொன்னதைப்போல் பாவித்துக்கொண்டு இந்தகேள்வியை கேட்டதிலிருந்தே நீங்கள் ஒரு மன நோயாளியாகத்தான் இருக்கிறீர்கள் என்று புரிந்துக்கொண்டேன்.நான் மார்க்கங்களை அலசி ஆராய்ந்து இறுதி காட்சிக்கு இட்டுச் செல்லும் நிகழ்வை அறிய ஆவல் உள்ளவனாய் அதை அறிந்து மக்கள் முன் என் கருத்துக்களை வைத்தேன். எடுத்து வைக்கும் என்மனதை என்னவென்று அறியாது இந்த கேள்வியை கேட்டிருப்பது உங்கள் வரட்டு ஜம்பம்(பந்தா) மனநோயாய் உங்களிடம் இருக்கிறது என காட்டுகிறது.எனக்கு இறைவன் மேல் முழு நம்பிக்கை உண்டு. ஆனால் இங்கு பூமியில் உள்ளமத கடவுள்களை பற்றியது அல்ல அது.இந்துமத, இஸ்லாம்மத, கிருஸ்த்துவமத, சமணமத,புத்தமத, கோவில்களுக்கு சென்று துதிப்பவன் அல்ல நான். வெறும் கொள்கைவாதம் பேசிக்கொண்டு பலபேர் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக நடிப்பவன் அல்லநான்.வெளியில் கொள்கையை பேசிவிட்டு வீட்டில் பெண்ணிற்கு கோயிலில் திருமணம் செய்தவனும் அல்ல. பேத்திக்கு கோவிலில் மொட்டை யடிப்பவனும் அல்ல நான்உங்களைப்போல். (பழனியின்  சொந்த ஊருக்க சென்று அவரை பற்றி சேகரித்த உண்மை செய்திகள்)உங்களையே நீங்கள் உணர்த்து சற்று சிந்தித்துப்பாருங்கள். கொள்கைவாதி என்றால் உயிர் போகும் வரை அதிலிருந்து மாறாதவன். அது நல்ல கொள்கையாயிருந்தாலும் சரி பிறர் பார்வையில் தீயக் கொள்கையாய் இருப்பதாக இருந்தாலும் சரி கொள்கைக்காக நிற்க வேண்டும். மார்தட்டி நிற்பவன் கொள்கை முழக்கம் இடுகின்றவர்கள் பலர் இன்றைய கம்யூனிஸம் பேசும் பலபேர் வெளிக்கு மட்டும் பிழைப்புக்கு மட்டும் பெருமை தேடிக் கொள்கிறார்கள்.நான் சொல்வது உண்மையா என்பதை உங்கள் வாழ்வில் சமுதாய வாழ்க்கையிலே உங்கள் உள்ளத்தை தொட்டுச் சொல்லுங்கள். பின் நா கூசும்.பேசுவற்கு அறிவார்ந்த சிந்தனையிலே லெனின் கோட்பாட்டில் நிற்பதாய் மனத்திலே ஒரு பிரமையை கொண்டு வாழ்ந்து காண்பிப்பதாய் டமாரம் அடித்துக் கொள்கிறீர்கள். நான் உங்களை யார் என்று கேட்டேனா . நீங்களே துவங்கும் போது உங்கள் பெருமையை பேசும்போது தற்குறியாய் தற்புகழ்ச்சியை அளித்து நின்றதை பார்த்ததிலிருந்தே நீங்கள் உண்மை கம்யூனிஸ கொள்கைவாதி அல்ல என்பது தெரிகிறது. நான் நல்லவன் என்ற சொல்லை நாமே சொல்லிக்கொள்ளக் கூடாது மற்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.உண்மை கொள்கைவாதி பிறரால் அடையாளம் காட்டப்படுபவன் தற்புகழ்ச்சி தன்னை தானே அடையாளம் காட்டிக்கொள்வான்.
                நீங்கள் உங்களைப் பற்றி சொன்னதால் நான் அவசியம் என கருதி என்னைப்பற்றி சொல்லுகிறேன். அத்தனை மார்க்க மதக்கருத்துக்களையும் தத்துவங்களையும் ஏன் உங்கள் பொருள் முதல்வாத தத்துவம் வரை அலசி ஆராயும் பணியை கொண்டவனே அன்றி எந்த ஒரு ஆலயத்திலும் சென்று தொழுதவன் அல்ல. ஆனால் இறுதிநாளில் ஜோதியாய் வரும் இறைவன் ஆதியாய் நின்று நியாயத்தீர்ப்பு செய்வான் என்பதை திடமாய் நம்புபவன். ஏழை பணக்காரனையும், இன்பத்துன்பத்தையும், சுரண்டலையும் சுரண்டலற்றதையும், இறைவன் செய்வதில்லை என்ற பெரும் நம்பிக்கைகொண்டவன் நான். குற்றங்களை தட்டிக்கேட்டு இறுதியில் அதர்மங்களை அழித்து தர்மங்களை நிலை நாட்ட வருபவனே இறைவன். என்ன என்றே தெரியாமல் என்சிந்தையிலும் கொள்கையிலும் இல்லாத கருத்தை இருப்பதாய் பாவித்து கேடட கேள்வியில் இருந்தே உங்கள் தரம் என்னவென்று தெரிகிறது. ஆன்மீகத்தை அறவே வெறுப்பதாய் காட்டிக்கொள்ளும் நீங்கள் ஆன்மீக உலகத்தில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். எது ஆன்மீகம் இதுவரை இந்த வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியாமல் அலைந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.ஆன்ம நலம் அதாவது ஜீவநலன் அதாவது மானுடநலன் பற்றிஉரைக்க வந்தவர்கள் எல்லோரும் மானுடம் உயர்வதற்கான வழிகளை செப்பிநின்றார்கள். இன்றையப்பொருள் முதல்வாதம் கொண்ட தத்துவம் என்று முளைத்தது இந்த பூமியில்? சிலநூறு ஆண்டுகளில் முளைத்து மலர்ந்து அழிந்து துர்நாற்றம் எடுத்து நின்றது இது. ஆன்ம நலம் என்றால் உலக மக்களின் நலன் என்று பொருள். உங்கள் தத்துவத்திற்கு முன்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்த கபிலமுனிவன் கற்று தந்த பாடம் இறைமறுப்பு வாதம் கொண்ட பொருள் முதல்வாதத்தையும் எண்ணமுதல்வாதத்தையும் என்னவென்று எடுத்துச்சொல்லவந்த  சாங்கியதத்துவம். இந்த சாங்கியதத்துவம் தான் தத்துவங்களிலே முதல் எழுந்து வந்த தத்துவம். நீங்கள் கண்ட. இறைமறுப்பது வாததத்துவத்திற்கு லெனின் தந்தை அல்ல. கார்ல்மார்க்ஸ் தந்தையல்ல. சாங்கியதத்துவத்தை தந்த கபிலமுனிவனே தந்தையிலும் தந்தையாய் இருக்கிறார் .  இதை கேட்பதற்கு விந்தையிலும் விந்தையாய் இருக்கிறதா! உங்கள் மந்தைக்கு சொல்லுங்கள் இதை.இப்படிபட்ட கபிலமுனிவன் மனித நேயத்தை பற்றி மகத்தான கருத்துக்களை சொன்னதுபோது இறைசிந்தனையை எதிர்த்து நின்றார். அதனால் அறிவார்ந்த உலகம்ஆன்மீகம் என்ற மதத்திலிருந்து அவரை வெட்டிவிடவில்லை பொருந்தாத கிளை என்று. இப்படி எழுந்த தத்துவங்கள் மக்கள் நலனிற்கு உதவுகிறதா என்பதை அறிவு ஜீவிகள் பார்த்தார்களே ஒழிய, இறைவன் பொருட்டு ஒத்து கொண்டவர் ஒத்து கொள்ளாதவர் என்ற பாகுபாட்டை காண்பிக்காமல் ஒரே அமைப்பில் வைத்து பார்த்தார்கள். வேதங்கள் இதிகாசங்கள் என எடுத்துரைக்க வந்தவர்களும் எத்தனையோ இதிகாசங்கள் இறைமறுப்பு கொள்கையாய் பொருள்முதல்வாத கொள்கையாய் நின்ற போதிலும் அவற்றை தூக்கி எறிந்துவிடவில்லை உண்மை அறிவு ஜீவிகள். எழுந்த உபநிசதங்களிலே இறைவன் இல்லை என்ற கோட்பாட்டை கொண்ட முண்டக உபநிசதம் தலையாய உபநிசதமாய் இன்றளவும் ஆன்மீக வாதிகளால் அறிவு ஜீவிகளால் பேணிப்போற்றப்படுகிறது. சாங்கிய தத்துவமும், முண்டக உபநிசதமும் இறைமறுப்புக் கொள்கைக்காக வந்தவை. தன் சித்தர் பணியை சிரமேற்கொண்ட வியாசன் தான் ஒரு பொருள்முதல்வாதம் கொண்டவன். சாங்கியதத்துவத்தை பின்பற்றுபவன் என்பதற்காக எழுதினார் பகவத்கீதையை. இந்த பகவத்கீதையின் ஆசிரியர் குறிப்பை ஆழ்ந்து பார்த்தால் முகவுரையிலே தன் முகவுரையை தந்துநிற்கிறார் வியாசர். பகவத்கீதையை தொடங்கும் போதே நீங்கள் லெனின் நாமம் வாழ்க கார்ல்மார்க்ஸ் நாமம் வாழ்க என்று சொல்வதுபோல் பெரியார் நாமம் வாழ்க என்று சொல்வதுபோல, வாழ்க சாங்கியதத்துவம் என எண்ணுமாறு சாங்கியதத்துவம் என எழுதி கபிலமுனிவனுக்கு தன் நன்றியை செலுத்தி நிற்பதை காணலாம். இப்படி இறைமறுப்பு நூல் மானுடனே அனைத்து சக்தியையும் படைத்தவன் என்று சொல்ல வியாசன் எடுத்துக்கொண்ட கதாபாத்திரம் ஸ்ரீகிருஷ்ணன் கடவுளாலக மாறிபோனது விந்தையாய் இருக்கிறது. அல்லவா.எப்படியோ இன்று வரை தத்துவ ஆராய்ச்சிகள் இறைவன் உண்டா இல்லையா என்பதை வைத்து முன்னுரிமை அளிக்கப்படாமல் மக்கள் நலனுக்காக எக்கருத்தையும் அழிக்காமல் பாதுகாத்து வைத்தார்கள்.எனவே உங்கள் தத்துவத்திற்கு முன்னே எத்தனையோ தாத்தாவிற்கு முன்னே அந்த தத்துவம் இருந்ததால் தான் இந்நாளில் நீங்கள் செங்கொடி தூக்கி நிற்கிறீர்கள்.சிவப்பு என்பதே பொதுவாக மக்களிடம் கேளுங்கள் அபாயம் (டேஞ்சர்) என அறிவிப்புக்கு அடையாளபடுத்தி நிற்பார்கள். பொதுவாக அறிவியல் வல்லுனர்கள் மனநல மருத்தவர்கள் அறிவின் ஆய்வில் முறைப்படி நின்றவர்கள் அறிவிக்கும்போது தூங்கும் அறையில் சிவப்பு விளக்கு எரிய விடாதீர்கள் . அது மனநோயை உருவாக்கிவிடும் ஆய்வின் அடிப்படையில் கண்ட அறிவியல் உண்மை இது. சமுதாயத்தில் இந்த மார்க்ஸிஸம் பாலாறும் தேனாறும் பாய்ந்து பாய்ந்து ஓடுகிறது ரஷியாவில் என பொய் பகட்டுப் பிரச்சாரத்தை ஓட்டிக் கொண்டு உங்களால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடிந்தது.
       60ஆண்டுகால இடைவெளியிலே நீங்கள் நின்ற கம்யூனிஸம் இன்று காலாவதி ஆகிப்போன கதை என்ன. காரணம் என்ன. இந்த கம்யூனிஸம் ரஷிய மக்களுக்கு அளித்த பரிசு என்ன தெரியுமா பஞ்சம், பட்டினி, விபச்சாரம், இப்படி உலக நாடுகளே அதிர்ந்து போகின்ற அளவிற்கு விபச்சாரம் பெருகி நின்றதாலோ என்னவோ சிவப்பு கொடி ஏந்திய இடங்கள் அந்த தத்துவ ஆட்சி தந்துநின்றது விபச்சாரம் என்பதாலோ இன்று மக்கள் வழக்கத்தில் சிவப்பு விளக்கு பகுதி என்று சொல்லி நிற்கிறார்களோ. ராகுல்ஜீ சாங்கர்த்தியேயன் ஒரு சிறந்த ஆய்வாளர் அறிஞர் கம்யூனிஸத்தில் இறங்கி காலத்தால் வருந்தி தூக்கியெறிந்து நிலையையும் நீங்கள் அறியமாட்டீரோ. விளாடிமீர் லெனின் ரஷ்யாவிலே அவருடைய தந்தை இறப்பிற்கு பிறகு அண்ணன் அலெக்சாந்தர், ஜார்ஜ் மன்னனை கொலை செய்ய முயன்றதற்காக கைது செய்யபட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தவருடைய தம்பிதான் லெனின். இப்படி குடும்பத்திலே கூட அந்த ரத்தத்தில் (தாதுவில்) உதித்தவர்கள் கொலை செய்ய முற்பட்டவர்கள் என்று எண்ணும்போது இப்படிபட்ட ரத்தத்திலிருந்து சமாதானத்தை எப்படி பெற்று நிற்க முடியும் என எண்ணத்தோன்றுகிறது. தமிழ்நாட்டு மக்கள் சிலருக்கு சிலமோகம் இருக்கும். தமிழில் பேசுவதைவிட நம்மை அடிமைபடுத்தி ஆண்டுநின்றவனின் மொழி பேசுவது பெருமை தரும் விஷயமாய் பிதற்றி திரிபவர்களும் உண்டு. மனித நேயத்தை பற்றி இவர்களை பேச சொன்னால் வெளிநாட்டு காரனை மேற்கோள்காட்டி சொல்லும் இயல்பு கொண்டவர்கள். இந்தியமண் எத்தனையோ சிந்தனை வாதிகளை தத்துவமேதைகளை தாரைவார்த்துக் கொடுத்து அவர்களை பேசினால் கௌரவம் இல்லை. இப்படிபட்டவர்கள் கட்சியிலும் சிலர் இருக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது . கட்சியிலும் ஆங்காங்கே வெளிநாட்டுக்கட்சி என்ற மோகம் ஒரு சிலரிடம் தலைகாட்டி நிற்கிறது போலும். சாங்கியத்தத்துவ வாதிகள், அத்வைதமத அத்வைதிகள், பௌத்தவர்கள், சமணர்கள், பகுத்தறிவுவாதிகள், இவர்கள் எல்லோரும் மார்க்ஸிஸவாதிகளின் சகோதரர்களே என கை கோர்த்து நிற்பதற்கு சரித்திர சான்றுகள் பல உள்ளன. மற்றுமின்றி ஒருவருக்கொருவர் உங்களுக்குள் ஓடி உதவிநின்றதை எதனடிப்படையில் என்றால் பொருள்முதல்வாதம் கொண்ட முக்கியமாய் கடவுள் மறுப்பு கொள்கைக்காக. ஒரு கடவுள் மறுப்பு கொள்கை கம்யூனிஸத்தையும் ஏனைய இந்த மதங்களையும் சகோதரராய் கூட்டணி கட்சி பார்வையில் கூட்டாய் சேர்ந்து நின்றதை சரித்திரம் மறந்துவிடாது. இப்படியிருக்க நான் கம்யூனிஸவாதி இறைவன் மறுப்பு கொள்கையுடையவன் என உங்களை காட்டிக்கொண்ட விதம் அதே நேரத்தில் மதங்கள் எல்லாம் சுரண்டுவதும் சுரண்டபடுவதுமான இருதன்மையை உருவாக்கி நிற்க என சொன்ன உங்கள் அதிபுத்திசாலி தனம் உங்களை சார்ந்த உங்கள் கொள்கையையே கொண்ட கடவுள் மறுப்பு வாதத்திற்கு வந்த அத்வைதம், பௌத்தம், சமணம், இவைகள் எல்லாம் மதங்களாய்தான் நிற்கிறது என்று கண்டுணர ஏன் தவறிவிட்டது. கடவுள் உண்டு என்று சொல்பவன் ஏமாற்றுவதற்காக மதம் என்று உண்டாக்கினால், இதே வேலையை உங்கள் கோணத்தில் பார்த்தால் கடவுள் மறுப்பு கொள்கையுடையவைகளும் மதமாய் எழுந்து நீங்கள் சொன்ன அதே வேலையைத் தானே செய்துநிற்கிறது என்று பொருள்படுகிறது. மல்லாந்து படுத்துக்கொண்டு கண்மூடிதனமாய் எச்சிலை துப்பினால் அது உங்கள் முக்தில்தான் விழும் என்பதை அறியமாட்டார்களா? எப்படியோ போனால் போகட்டும் இறைவன் மேல் உங்களுக்கு இவ்வளவு துவேஷம் வரகாணம் என்ன என யோசிக்கிறேன்.ஒருவேளை உங்கள் தலைவர் லெனின் பக்கவாதம் வந்து படுத்துகிடந்ததிற்கும் மூளை நரம்பு வெடித்து இறந்ததிற்கும் இறைவன் தான் காரணம் என சம்பந்தம் இல்லாமல் சம்பந்தப்படுத்தி வீணான கேள்விகளை கற்பனையாய் நீங்கள் வளர்த்துக்கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் கேட்டது போல நினைத்து கொண்டீர்களோ என்று ஆராயத்தோன்றுகிறது. இனியாவது சம்பந்தம் இல்லாத இடத்தில் சம்பந்தமில்லாமல் பேசி தங்கள் மேதாவிதனத்தை காண்பிக்க வேண்டாம். மதம் சம்மதம் என்று நான் உங்களுக்கு சொன்னேனா. இனியாவது நல்ல சிந்தனைவாதியாய் இருப்பதற்கு எத்தனையுங்கள். மதங்களின் தோற்றம் எது? துவக்கம் எது? அது மார்க்கமே. அப்படியென்றால் காலப்போக்கில் மார்க்கங்கள் எல்லாம் மதங்களாய் மாறிப்போனது என்றால் இப்போது உங்கள் கம்யூனிச மார்க்கமமும் அதே துவக்கத்தில்தானே நின்று கொண்டிருக்கிறது நல்லவேளை நாம் பிழைத்துக்              கொண்டோம் . கம்யூனிச மார்க்கம் காலத்தால் மதமாய் மாறுவதற்கு முன்பாகவே தூக்கியெரியப்பபட்டது. சொர்க்கத்தைக் காட்டுவோம் என சொன்ன கம்யூனிசம் ரஷ்யாவில் சோவித்நாட்டில் நரகத்தை காட்டிநின்றது என்பதை வரலாறு காண்பிக்கிறது . சோவியத் நாடுகளின் கம்யூனிச விளைவு அதன் நுழைவு சொர்க்கத்தை நோக்கி இருந்தாலும் அது பெற்று தந்தது கொடிய நரகத்தையே. இப்படியிருக்க எந்த முகத்தைக்கொண்டு நல்ல வாழ்க்கையை நாட்டினில் நிலைநாட்ட எடுத்துச்சொல்கிறீர்கள்இறுதிபாதை கம்யூனிசம் என்று. ஒவ்வொருவருக்கும் இறுதிபாதை சுடுகாட்டிற்கு பயணிக்கும் காலம்தான் இதற்குமேல் சொல்ல வேண்டாம் உங்களுக்கு நன்றாய் புரியும்.
    இறுதி முடிவாய் முடியவேண்டியது மார்க்ஸீஸம் என்றீர். இந்த மார்க்ஸிஸத்தால் கடந்தகால அனுபவங்கள் சோஷலிச நாடுகள் பட்ட வேதனை பத்தாதா? ஏன் இந்தியாலும் என்ன முன்னேற்றத்தை கண்டு நின்றனர். உங்கள் வர்க்கத்தில் ஒருவர் தொலைநோக்கு பார்வையால் தொழிற்சங்கத் தலைவராய் அவதாரம் எடுத்த மாதிரி உங்களால் வர்ணிக்கப்பட்ட. திரு.ஜார்ஜ்பெர்னான்டஸ் மந்திரியாய் பதவி ஏற்ற போது தொழிலாளிகளுக்கு விடிவு பிறந்து விட்டது. இனி தொழிலாளர்கள் இனமே வறுமையில்லை பசியில்லை பட்டினியில்லை தாகமில்லை என நினைத்தது. தொழிலாளர் வர்க்கம் பூரிப்பாய் கொண்டாடியது. கட்டுரைகளை கடகடவென எழுதித்தள்ளியது. என்ன நடந்தது தொழிற்சங்க வரலாற்றிலே அவரின் ஆட்சியில் தான் காணாத் துயரத்தை கண்டுநின்றது . எட்டாத துயரத்தை எட்டிப்பிடித்தது. தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. 1950-இல் இருந்து குடியரசு ஆட்சியிலிருந்து குடியாட்சியிலே எந்த ஒரு நபரும் தொழிலாளர் வர்க்க துரோகியாக நின்று செய்யாத செயலை செய்துநின்றார்.தொழிலாளர்களை ஒடுக்க உருக்குலைக்க தொழிற்சங்கங்களின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கிட இதுவரை எவரும் கண்டிராத அடுக்குமுறை சட்டங்களை குறிப்பாக. FR-17A என்ற தொழிலாளர் விரோதபோக்கு சட்டங்களை கொண்டு வஜ்ஜிராயுதமாக தாக்கி நின்றார். அனுபவ வாழ்க்கையிலும் ஆங்காங்கே ஏழையாக இருக்கும்வரை கம்யூனிஸத்தை பேசுபவன் முதலாளித்துவத்தை அடைந்துவிட்டான் என்றால் தொழிலாளித்துவத்தை ஒடுக்க அவனைவிட சிறந்த ஆயுதம் இல்லையென காட்டுவதை பார்க்கும்போது கம்யூனிஸத்தை பற்றி இன்று கையாண்டு நிற்பவர்களை பற்றி எண்ணுகின்றபோது ஒரு நிலையில் மனம் கூச்சப்படத்தான் செய்கிறது. கம்யூனிஸவாதி என்று சொல்வதற்கு திரு.அடல்பிஹாரி வாஜ்பாய்னுடைய மந்திரி சபையிலே ஒரேயொரு கிருஸ்த்துவ பெயரைக்கொண்ட ரயில்வே துறையில் பணிபுரிந்த தொழிற்சங்கவாதியான இவர், இதற்கு முன் 1995-இலிருந்து 1960வரை பலத் தொழிற்சங்கப் போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் வீரமாக செய்து முடித்து ஒன்பது லோக்சபா எலக்சனிலே வெற்றி பெற்ற தொழிற்சங்க மகாவீரர் தொழிற்சங்களுக்கு செய்த சாதனை என்ன தொழிலாளர்களுக்கு நேர்ந்தது வேதனை வேதனை வேதனை மட்டுமே. உடனே இதற்கு சமாதானம் பெயரை பாருங்கள் அது கிருஸ்த்துவம் என சமாதானம் சொல்லக்கூடாது.  இவ்வளவு தீவிர கம்யூனிஸவாதியாக லெனின் தாசனாக அடையாளம் காட்டிக்கொள்ளும் தாங்கள் பக்கா ஆன்மீக இந்துமத பெயரை லகுவாக கொண்டு நான் பழனி பழனி என்று சொல்லிக்கொள்வதை நினைத்து கொள்ளுங்கள் .  இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் உங்கள் குணம் சம்பந்தமில்லாமல் சிந்திப்பவர் என்பதால் இந்த விஷயத்தை சம்பந்தபடுத்தி சொல்கிறேன்.  ஏனென்றால் ஆன்மீக உலகிலே வாழாமல் ஏதோ தனி ஒரு உலகத்தில் வாழ்வது போல் கற்பனை செய்துக்கொண்டு பேசிதிரியும் உங்களை பார்த்து ஒரு வினாவை வினவுகின்றேன்.பகுத்தறிவாதியான நாத்திகவாதியான கம்யூனிஸவாதியான நீங்கள் இந்த உலகத்திலே ஆஸ்த்திக மார்க்கத்தில் அதாவது இறைவனை ஒத்துக்கொள்ளும் இறையாளர்களின் கூற்றையோ அவர்களின் பயன்பாட்டையோ வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொல்லுகின்ற நீங்கள் நித்தம் நித்தம் காலண்டரில் காணும் தேதி என்னச் சொல்லிகொண்டிருக்கிறது.உங்களின் பிறந்ததேதி என்ன? உங்கள் பேத்தியின் பிறந்ததேதிஎன்ன?உங்கள் திருமண தேதி என்ன?ராணுவத்தில் சேர்ந்த தேதிஎன்ன? ஓய்வு பெற்ற தேதிஎன்ன? எனக் கேட்பதைபார்த்து ஏதோ எண்கணித சாஸ்திரம் பார்க்ககேட்கிறேன் என்று நினைக்காதீர்கள்.நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம்  எதை எடுத்தாலும் ஏன் உங்கள் கம்யூனிஸ்டு கூட்டங்கள் போடுவதற்கு நாளை குறிப்பிட்டு பேசும்போதும் யாரை பயன்படுத்தி நிற்கிறீர்கள என எப்பொழுதாவது ஒருகணம் பகுத்தறிவு என பறைசாற்றி கொள்ளும் நீங்கள் சிந்தித்து பார்த்தது உண்டா. எதற்கெடுத்தாலும் ஒவ்வொருமுறையும் கிருஸ்த்துவ மார்க்கவாத இறையாளன் இயேசுவின் வயதை தானே குறிப்பிட்டு நிற்கிறீர்கள் இது காலத்தின் கட்டாயம்.இப்படி எதற்கெடுத்தாலும் அந்த நிமிடம் வரை இயேசுவின் வயதை வருடம் மாதம் நாள் மணிக்கணக்கில் அடையாளமிட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஆத்திகத்தை விலக்கி வாழ்கிறேன் என பிணக்காய் பேசிதிரிகிறீர்கள்.ஏதோ தனி வார்ப்பாக தனி உலகத்தில் வாழ்வதாக சொல்லிக்கொள்கிறீர்கள்.
        இறைவனை நம்பாத நீங்கள் ஏழை பணக்காரரை ஏன் இறைவன் இப்படி படைத்தார் என்றக் கேள்வி எண்ணம் உங்கள் மனதில் எப்படி வந்தது உங்களையும் அறியாமல் உங்களிடத்தில் இறைஉணர்வு குடிகொண்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.உங்களிடம் நான் எப்பொழுது சொன்னேன் ஏழை பணக்காரரை இறைவன் படைத்தார் என்று.நீங்கள் கம்யூனிஸவாதியை போல் லெனின் வாதியாய் இருப்பதுபோல் நான் இறைவனின் மேல் ஆழ்ந்த சிந்தனையும் பக்தியையும் கொண்டவன்தான் இல்லையென்று மறுக்கவில்லை. அதே நேரத்தில் ஏழை பணக்காரரை பிறக்க வைப்பது இறைவன் அல்ல.இத்தன்மை உருவாகி நிற்க காரணம் இறைவன் அல்ல என்பதில் ஆணித்தரமான உண்மையான எண்ணம்கொண்டு திடமாய் இருப்பவன். இறுதிநாள் இறைநாள் இந்த பூமியிலே விரைவில் நெருங்கப் போகும் அந்த நியாயத்தீர்ப்புநாள் ஒட்டுமொத்த மக்களுக்கு நியாயத்தீர்ப்பு செய்து தவறு புரிந்தோருக்கு மன்னிப்பும் குற்றம் புரிந்தோருக்கு தண்டனையும் தூய்மை விசுவாசம் கொண்டவருக்கு மேன்மையும் பெற்று தரப்போகும் நாள் விரைவில் வரப்போகிறது என்பதிலே மட்டும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் ஏழை பணக்காரரை இறைவனே படைத்து பேதபடித்திருந்தால் அதை குற்றமாக நீங்கள் கருதி நின்றால் இறைவனே மக்களை தீர்ப்பிட இயலுமோ. எனவே உங்கள் கேள்விக்கு இவைகளை ஏற்படுத்தி கொடுத்தது இறைவன் அல்ல . ஏற்படுத்திக் கொண்டது நம்மை போன்ற மனிதர்களே. எல்லாம் படித்துமுடித்துவன் பேரறிவாளனாய் தங்களை காட்டிகொண்டும் கம்யூனிஸவாதியாக இந்த கேள்வியை கேட்பதாய் சொன்னீர்கள். உங்களை பொருத்தவரை கம்யூனிஸம் படித்தால் உலகறிவியே பெற்றுவிட்டதாய் ஒரு பிரமை அதனால் தான் உலகத்தின் முடிவு கம்யூனிஸத்தை நோக்கி நடைபோட வேண்டும் என்கிறீர்கள். ஆனால் நானோ கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற எண்ணத்தில் பயணிப்பவன். இக்கட்டுரையை இத்தோடு முடிக்கிறேன். அடுத்த கடிதத்தில் மீண்டும் சந்திப்போம் நீங்கள் நன்றாக சிந்திக்க.

5 comments:

  1. நான் உங்கள் எந்த பக்கமும் வரவில்லை எனக்கு என் வேலையை செய்யவே நேரம் இல்லை, ஆகயால் உங்கள் தவறான பரப்புரை இங்கே எதற்க்கோ? நீங்கள் உங்கள் கூட்டத்தை தக்கவைத்து கொள்ள என்ன வேண்டுமாயினும் செய்ய வேண்டிய நிலை நானோ என்னுடன் என்னுடன் என் வயோதிக தாய் தந்தையையும் காக்கும் கடமை உள்ளது, உங்கள் பக்தர்களுக்கு என்ன சொல்ல நேரடியாக கேள்வி பதில் பார்ப்போம், நான் இனி உங்கள் எந்த பதிவிலும் வர மாட்டேன் அதேபோல் நீங்களும் என்னை பற்றி எழுதி நேர்த்தை வீண் ஆக்க வேண்டாம். உண்மையுடன் செயல்படுங்கள்
    ReplyDelete
  2. இதோ உங்கள் உரை தொடர்ச்சி
    Venkatraman Narendran அண்ணா உங்க கார்ல்மார்க்ஸ் என்ன சொன்னாரு தெரியுமா?இறைவன் இந்த உலகத்தில் வந்து இறுதி நாளில் செய்வதை தன் ஆன்மபலத்தால் தொட்டுபார்த்தவர் .அது என்ன தெரியுமா? நல்ல சிந்தனையோடு விரும்பியதை பெற்று சகோதரத்துவத்துடன் வாழ்வதுதான்.இறைவன் இல்லை என்பது நல்ல சிந்தனை...See More
    1 • June 12 at 10:08am
    Hide 29 Replies

    Palani Chinnasamy வீண் வேலை வேண்டாம், ஆவி எழுப்பி டீ கொடுத்து ஏமாற்றும் வேலை வேண்டாம்.... மனித சமூகத்தில் இழி நிலையை மதங்களே தந்தன....
    Like • 2 • June 12 at 1:15pm

    Venkatraman Narendran சொர்க்கம் காண வேண்டி சொறிந்து சொறிந்து வார்த்தை ஜாலங்கலால் உசப்படுத்தி அதை நிசப்படுத்த முயன்ற கார்ல்மார்க்ஸின் தத்துவங்கள் பொருள் முதல்வாதமாய் புறப்பட்டு வந்த தத்துவம் இந்நாளில் பொருளற்று போன நிலையில் செல்லாக்காசாய் செல்லரித்துபோன பொருள் முதல்வாத தத்...See More
    June 12 at 11:47pm
    ReplyDelete


  3. Venkatraman Narendran பூமிக்கு வந்த இறையாளர்கள் எவரும் மதத்தை உருவாக்க வில்லையென்ற உண்மையை அறியாமல் இருக்கிறீர்கள்.மார்க்கங்களை வழிமுறைகளை சொல்லி சென்றார்களே ஒழிய மதங்களை உருவாக்கவில்லை.பின்னே வந்தவர்கள் மதங்களாய் மாற்றினார்கள் மக்களை ஏமாற்றினார்கள்.எதுபோல் என்றால் கார்ல்மார்க்ஸ் கொண்ட மார்க்கம் வலது கம்யூனிஸ்ட் இடது கம்யூனிஸ்ட் என்று பின்னால் வந்தவர்கள் செய்த புரட்டுதனம் போல் ஆகும்.
    1 • June 12 at 11:49pm

    Palani Chinnasamy நான் உங்களிடம் விவாதித்து என் நேரத்தை வீணாக்க முடியாத நிலை.... சுரண்டல் உலகத்தைப் வாழ வைத்து ....மக்களை முடவர்களாக்கும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்.... நான் மார்க்சிய சிந்தனை கொண்ட மனிதன் எனக்கு நிறைய சேதி சேகரிக்க நேரமின்மையால் உங்களுக்கு பதில் தர முடியாத நிலை... உங்கள் மதவாத பேயை ஓட்ட வேண்டியது அவசியம் ஆனால் ....பின் பார்ப்போம்...
    Like • 2 • June 13 at 9:31am

    Palani Chinnasamy கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்- சி. பழனி
    கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தனி வார்ப்பு ; தனித்தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள்; உலகப் பாட்டாளி வர்க்கப் படையின் நேர் நிகர்ற்ற போர்த்தந்திரியான தோழர் லெனின் அணியில் அங்கத்தினர்கள். இந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி...See More
    Like • 1 • June 14 at 2:54pm

    Palani Chinnasamy உலகத்தை நான் தான் படைத்தேன் என குர்ஆன்
    என்றோ,பைபிள் என்றோ,
    கீதை என்றோ கதை எழுதி
    விட்டு இவைகளே ஆதாரம்
    என்று கூறுவது படைத்ததற்கு
    ஆதாரங்கள் அல்ல,

    ஆதாரம் என்பது இந்த பூமியை
    அறிவியல் ஆராய்ந்து உலத்திற்க்கு உணர்த்தியது போல்
    உணர்த்தினால் தான் அது
    ஆதாரம்

    கடவுள் இருப்பது உண்மையானால், எல்லாவற்றையும் அவனே படைப்பவன் என்பது உண்மையானால்,இந்த
    பேரண்டத்திற்கே அதிபதி
    என்பது உண்மையானால்,

    இந்த அறிவியல் இன்னும்
    சாதிக்காத,சாதிப்பதற்கு முன்பாக, கடவுள் இந்த பேரண்டத்தில் இது வரை எத்தனை கோள்களை படைத்துள்ளது,இனியும்
    எத்தனை கோள்களை படைக்கும்
    அவைகளின் அளவுகள் என்ன?
    காலம் என்ன?இவைகளினால்
    ஏற்படும் நண்மை என்ன? இது
    வரை உபயோகப்படாமல் உள்ளதால் என்ன பயன்?

    இவைகளை பள்ளிக்குழந்தைகளுக்கு அறிவியலால் புரிய வைப்பது
    போல் உள்ள ஒரு புத்தகத்தையும்,அறிவியலால்
    இது வரை தொடாத பகுதிகளை
    நகல் எடுத்து அனுப்பி, நானே
    இவைகளை படைத்தேன்,நான்
    உள்ளதற்கு இது வே ஆதாரம்
    என்று நிருபிக்கட்டும்.அதன்
    பிறகு கடவுள் உள்ளதைப் பற்றி
    சிந்திக்கலாம்
    Like • 1 • June 16 at 1:14pm

    Alfred Vijayan Palani Chinnasamy நண்பரே நீங்கள் என்ன தான் எழுதினாலும் திரு.Venkatraman Narendran போன்றவர்களை மாற்ற முடியாது. கோடி,கோடிகள் ஆன venkatraman narendran கள் இருக்கிறார்கள். அது தான் ஆட்சியாளர்களுக்கு சாதகம், அதிகாரிகளுக்கு சாதகம், முதளாளிகளுக்கு வரப்பிராசதம்.ஆனால் நீங்கள் சோர்ந்து விடாதீர்கள் தொடர்ந்து எழுதுங்கள். 2000 ஆண்டுகள் கழித்தாவது பலன் கிடைக்கும்.
    Unlike • 1 • June 16 at 1:41pm
    ReplyDelete
  4. நான் உண்மையை உண்மை போல் எழுதியுள்ளேன் நான் உங்கள் பகுதிக்கு வரவில்லை நீங்கள்தான் என் பகுதியில் வந்து தேவையற்ற விவாதங்களை வளர்த்ததுடன் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னென்வோ எழுதிகொண்டுள்ளீர், இப்பொழுதும் நான் என் நேரத்தை இங்கே வீண் செய்யவேண்டிய நிலை என் சொந்தங்களை சொர்க்கத்திற்க்கு கொண்டு செல்லுங்கள் ஆனால் உண்மையாக...
    இனி வேண்டாம் நமது இந்த தேவையற்ற விவாதம் நீங்கள் எதையோ செய்யுங்கள்
    ReplyDelete
  5. இதை நான் இத்துடன் முடித்து கொள்ள நினைப்பது காரணம், என் விலாசமின்றி என் பதிவின் உட்புகுந்து தேவையற்ற வாக்குவாதம் தொடங்கி வைத்தபின் என்னுடைய வாழ்க்கை நிலையில் நுழையும் உங்கள் நோக்கம் நல்லவையாக இருக்க வாய்ப்பே இல்லை. எப்பொழுது நீங்கள் தனி நபர் தாக்குதல் தொடங்கி விட்டீர்களோ அப்பொதே உங்களிடம் தத்துவம் இல்லை என்பது புரிந்துவிட்டது, உங்கள் சொர்க்க வாசலுக்கு தடையாக நான் இருக்கவிரும்பவில்லை, என் சொந்தங்களின் தயவில்தான் இதனை எழுதுகின்றீர் எங்க்கு தெரியும் அந்த மூடர்களை பற்றி எழுத ஒன்றும் இல்லை.
    சமூகம் ஒழுக்கம், சமூக பண்பாடு என்பதும் நல்லவன் கெட்டவன் அறியா அவர்களை நான் என்னவென்று சொல்ல...
    இத்துடன் நம் தேவையற்ற விவாதத்தை முடித்து கொள்வோம்... நன்றி
    ReplyDelete

No comments:

Post a Comment